ADDED : ஜன 09, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் வி.மருதுார் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவகாந்தி மனைவி அலமேலு, 32; கே.கே.ரோடு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் மகன் ராதாகிருஷ்ணன், 35; இவர்கள் இருவரும், 35 வயது பெண்ணை விழுப்புரம் அழைத்து வந்து, வீடு வாடகை எடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார் நேற்று முன்தினம், ராதாகிருஷ்ணன், அலமேலுவை கைது செய்து, பெண்ணை மீட்டனர்.