ADDED : டிச 15, 2024 07:13 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் 2 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் சொக்கலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம், 53; விழுப்புரம் நேரு வீதியில் மளிகை கடை வைத்துள்ளார்.
இவர், நேற்று முன்தினம் காலை கடை திறந்து பார்த்தபோது, பின்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே கல்லா பெட்டியில் இருந்த 98 ஆயிரம் ரூபாய் மற்றும் கண்காணிப்பு கேமரா, 2 பென் டிரைவ் ஆகியவை திருடுபோனது தெரிய வந்தது.
மற்றொரு சம்பவம்
இதே நபர்கள், பக்கத்தில் உள்ள முகமது இர்பான் என்பவரின் பெட்டிக்கடை பூட்டை உடைத்து, கல்லாப்பெட்டியில் இருந்த 32 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த இருவரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.