தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கடலில் குளித்த 2 மாணவர்கள் மாயம்

 கடலில் குளித்த 2 மாணவர்கள் மாயம்

 கடலில் குளித்த 2 மாணவர்கள் மாயம்


ADDED : ஆக 24, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 04:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்தபோது, அலையில் சிக்கி மாயமான பள்ளி மாணவர்கள் சசிதரன், 16, பிரதீஷ், 16, ஆகியோரை, கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம், சின்ன முதலியார்சாவடியை சேர்ந்தவர்கள் வேலு மகன் சசிதரன், நாகராஜன் மகன் பிரதீஷ், ரகு மகன் கவுஷிக், 16. இவர்கள் மூவரும் குயிலாப்பாளையம் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தனர்.

இவர்கள் நேற்று, சின்ன முதலியார்சாவடி கடல் பகுதியில் குளித்தனர். திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி, மாணவர்கள் மூவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

அங்கிருந்த மீனவர்கள், கவுஷிக்கை மட்டும் காப்பாற்றி, கரைக்கு கொண்டு வந்தனர். சசிதரன், பிரதீஷ் மாயமாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us