/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீபாவளிக்கு 20 டன் பட்டாசு குப்பைகள் குவிந்தன! அகற்றும் பணியில் விழுப்புரம் நகராட்சி தீவிரம்

ADDED : நவ 05, 2024 06:50 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில், தீபாவளி பண்டிகையொட்டி, பட்டாசு வெடித்ததில், கூடுதலாக 20 டன் குப்பைகள் குவிந்தன.
விழுப்புரத்தில் தீபாவளி பண்டிகையின் போது, முதல் நாளிலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடிக்கத் துவங்கினர். தீபாவளி தினத்தன்று காலை மற்றும் இரவும் அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.
இதனால், வீடுகள் முன்பும், முக்கிய சாலை சந்திப்புகளிலும் பட்டாசு கழிவுகள், குப்பைகள் தேங்கியது.
நகராட்சி துப்புரவு ஊழியர்கள் வழக்கமான குப்பைகளுடன், பட்டாசு கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகளையும் சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரை குப்பைகள் அகற்றும் பணி நடந்தது. இரண்டு துப்புரவு ஆய்வாளர்கள் மேற்பார்வையில், 350 துாய்மைப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நகரில் வழக்கமாக தினசரி 35 டன் அளவில் குப்பைகள் சேகரமாகும். தீபாவளி பட்டாசு கழிவுகள், அது சார்ந்த பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் சேர்ந்ததால், கூடுதலாக 20 டன் அளவில் குப்பைகள் தேங்கியது. வழக்கம்போல், மக்கும் குப்பைகள் பிரித்து, நகரில் உள்ள நுண்ணுர மையங்களுக்கு அனுப்பினர்.
மக்காத பட்டாசு, பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் பேக் செய்யப்பட்டு, லாரிகள் மூலம் அரியலுார் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படும் என நகராட்சி அலுவலர்கள் தரப்பில் தெரிவித்தனர்.