/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வந்த 2,100 கிலோ புகையிலை பறிமுதல்
/
எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வந்த 2,100 கிலோ புகையிலை பறிமுதல்
எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வந்த 2,100 கிலோ புகையிலை பறிமுதல்
எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வந்த 2,100 கிலோ புகையிலை பறிமுதல்
ADDED : ஜன 16, 2025 06:49 AM

விழுப்புரம்: புதுச்சேரி - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 2,100 கிலோ புகையிலை பொருட்களை விழுப்புரம் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் நிதிக்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துசெல்வம், அசோகன் தலைமையில் போலீசார், நேற்று விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 2.50 மணிக்கு வந்த புதுச்சேரி - ஹவுரா செல்லும் விரைவு ரயிலில் சோதனை செய்ததில், எஞ்சினுக்கு அடுத்த பொது பெட்டியில் கழிப்பறை அருகில் கேட்பாரற்று கிடந்த அட்டை பெட்டியை சோதனை செய்தனர்.
அதில், அரசால் தடை செய்த 2,100 கிலோ புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகள் இருந்ததை போலீசார் கண்டறிந்து,பறிமுதல் செய்து, விழுப்புரம் உணவு பொருள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து புகையிலை பொருட்களை கடத்திய நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.