ADDED : ஆக 30, 2025 11:55 PM

செஞ்சி : வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்கலம் ராஜாதேசிங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது.
மாவட்ட சுகாதார இணை இயக்குனர் லதா தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார் வர வேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி மாவட்ட கவுன்சிலர் அன்புசெழியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பொது மருத்துவம், இதயம், எலும்பு, நரம்பியல், தோல், மகப்பேறு, குழந்தைகள் நலன், மனநலம் உள்ளிட்ட 17 வகை நோய்களுக்கு சிகிச்சையளித்தனர்.
ரத்தப்பரிசோதனை, ஈ.சி.ஜி., உள்பட பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில், 2300 பேர் கலந்து கொண்டு உடல் பரிசோதன செய்து கொண்டனர்.