/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிரத்தியங்கிரா கோவிலில் 24 மணி நேர அபிஷேகம்
/
பிரத்தியங்கிரா கோவிலில் 24 மணி நேர அபிஷேகம்
ADDED : மே 29, 2025 12:05 AM

வானுார்: மொரட்டாண்டி பிரத்தியங்கரா காளி கோவிலில் அக்னி நட்சத்திரம் நிறைவு பெறுவதையொட்டி, அக்னி நிவர்த்தி மகா அபிஷேகம் நடந்தது.
வானுார் அடுத்த மொரட்டாண்டியில் 72 அடி உயர பிரத்தியங்கிரா காளி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி வெயில் நட்சத்திர நிறைவு பெறும்போது, அக்னி தோஷ நிவர்த்தி அபி ேஷகம் நடப்பது வழக்கம். அதன் படி உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா காளிக்கு அக்னி தோஷ நிவர்த்தி அபிேஷகம் நடந்தது.
ஆலய பீடாதிபதி நடாந்துார் ஜனார்த்தனன் சுவாமிகள் தலைமையில் 24 மணி நேரம் நடைபெறும் அபிேஷகம் நேற்று காலை 6:00 மணிக்கு துவங்கியது, 1008 லிட்டர் இளநீர், நுங்கு மற்றும் 108 கிலோ மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம், உட்பட 108 திரவியங்களால் இடைவிடாது அபிேஷகம் நடந்தது.
அதைத் தொடர்ந்து காளிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. 24 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் அபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.