sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஒரே இரவில் கொட்டிய மழையால் 26,920 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு

/

ஒரே இரவில் கொட்டிய மழையால் 26,920 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு

ஒரே இரவில் கொட்டிய மழையால் 26,920 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு

ஒரே இரவில் கொட்டிய மழையால் 26,920 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு


ADDED : ஜன 09, 2024 01:13 AM

Google News

ADDED : ஜன 09, 2024 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொட்டிய கன மழை காரணமாக 26 ஆயிரத்து 920 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின.

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 13.3 செ.மீ., வானுாரில் 120 மி.மீ., மழை பதிவானது.

இதனால், திண்டிவனம் - மரக்காணம் சாலையில் ராவணபுரம் ஏரி நிரம்பி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆலங்குப்பத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அப்பகுதி சாலையில் ஒரு கி.மீ., துாரம் வரை தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஆக்கிரமிப்பால்வெள்ளப்பெருக்கு


முருக்கேரி ஏரியில் உபரி நீர் செல்லும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டதால், சிறுவாடி, முருக்கேரி கடைவீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மரக்காணம் - திண்டிவனம் சாலையில் 5 அடி வரை தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை போக்குவரத்து பாதித்தது.

மேலும், 50க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த மளிகை பொருட்கள், ஜவுளிகள், வீட்டு உபயோக பொருட்கள் என 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியது. மின் விநியோகம் தடைபட்டது.

தகவலறிந்து வந்த அமைச்சர் மஸ்தான், கலெக் டர் பழனி, அர்ஜூனன் எம்.எல்.ஏ., மரக்காணம் சேர்மன் தயாளன் ஆகியோர் தேங்கி நின்ற தண்ணீரை ஜே.சி.பி., மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

உப்பளங்கள் மூழ்கின


பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 5000 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்ய தயார் நிலையில் இருந்த உப்பளங்கள் நீரில் மூழ்கின.

வண்டிப்பாளையம் தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அனுமந்தை - புதுச்சேரி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் மரக்காணம் வழியாக 20 கி.மீ., துாரம் சுற்றி புதுச்சேரி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கந்தாடு, ஆலத்துார் ஏரிகள் உடைந்து, தண்ணீர் வெளியேறியது. வருவாய்துறையினர் விரைந்து சென்று உடைப்பை சரி செய்தனர்.

பயிர்கள் மூழ்கின


மரக்காணம், அனுமந்தை, கூனிமேடு, வண்டிப்பாளையம், நடுக்குப்பம், கந்தாடு, ஆலத்துார் சிறுவாடி, நகர், வடநெற்குணம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் வானுார் தாலுகாவில் கிளியனுார், உப்புவேலுார், எடச்சேரி, கொஞ்சிமங்கலம், செஞ்சி அடுத்த கணக்கன்குப்பம், மழவந்தாங்கல், கெங்கவரம், சோ.குப்பம், அங்கராயநல்லுார், தேவதானம்பேட்டை, கோணை, பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் 16 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், தர்பூசணி, கிர்ணி, வேர்க்கடலை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வெள்ளப்பெருக்கு


செஞ்சி அடுத்த பாக்கம், சிறுவாடி மலை காடுகளில் பெய்த கன மழை காரணமாக சங்கராபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக செஞ்சியில் இருந்து மேல்களவாய் செல்லும் தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

வீடுகள் சேதம்


கனமழை காரணமாக ஜெயங்கொண்டான், பாக்கம், கெங்கவரம் ஊத்துக்கோட்டை பகுதிகளில் தலா ஒரு வீடு என 3 வீடுகள் இடிந்து சேதமானது.

திண்டிவனம்


திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி வெளியேறிய உபரி நீர் காந்தி நகர், வகாப் நகர், தனபால் நகரில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.

காவரிப்பாக்கம் சப்வேயில் ஊற்று நீர் அதிகரித்ததால் சப்வே மூடப்பட்டது. கிடங்கல் ஏரி நிரம்பி, வரத்து வாய்க்கால் வழியாக உபரி நீர் ரயில்வே சப்வே வழியாக பெருக்கெடுத்து ஓடியது.

விழுப்புரம்


விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் தரைபாலம் நீரில் மூழ்கியதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதேபோல், கணேஷ் நகர், லட்சுமி நகர், தேவநாதசுவாமி நகர், ஆசிரியர் நகர், ஆசாக்குளம், சாலாமேடு, திரு.வி.க., வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.

மாவட்டத்தில் மூழ்கிய பயிர்கள் ஏக்கர் விபரம்

கோலியனுார் தாலுகாவில் நெல் 525, உளுந்து 275, வேர்க்கடலை 10, தட்டைப் பயறு 37.5, கண்டமங்கலம் தாலுகாவில் நெல் 112.5, காணை தாலுகாவில் நெல் 500. உளுந்து 300, தட்டப்பயறு 75, விக்கிரவாண்டி தாலுகாவில் நெல் 425, உளுந்து 175, வேர்க்கடலை 50, தட்டப்பயறு 137.5. வானுார் தாலுகாவில் நெல் 3,750, உளுந்து 1,250, மரக்காணம் தாலுகாவில் நெல் 7,500, உளுந்து 3,750, வேர்க்கடலை 2,500. மயிலம் தாலுகாவில் நெல் 125, உளுந்து 175, வேர்க்கடலை 50, தட்டைப்பயறு 50, ஒலக்கூர் தாலுகாவில் நெல் 125. உளுந்து 100, வேர்க்கடலை 125, செஞ்சி தாலுகாவில் நெல் 2,625, உளுந்து 50, வேர்க்கடலை 125, வல்லம் தாலுகாவில் நெல் 125. உளுந்து 325, வேர்க்கடலை 587.5, தட்டைப்பயறு 500, முகையூர் தாலுகாவில் நெல் 157.5, திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவில் நெல் 300 ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 16 ஆயிரத்து 270 ஏக்கர் நெற்பயிரும், 6,400 ஏக்கர் உளுந்தும், 3,450 ஏக்கர் வேர்கடலையும், 800 ஏக்கர் தட்டைப்பயறு என மொத்தமாக 26 ஆயிரத்து 920 ஏக்கர் அளவில் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.

மரக்காணத்தில் அதிக மழை

மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணி முதல் நேற்று காலை 9:00 மணி வரை பெய்த மழையளவு செ.மீ., வருமாறு:மரக்காணம் 13.3 செ.மீ., வானுார் 12, கஞ்சனுார் 8.7, விழுப்புரம், கோலியனுார், நேமூர் 8.6; சூரப்பட்டு 8.5, வளவனுார் 8.4; முண்டியம்பாக்கம் 7.5; திண்டிவனம் 7.4, அனந்தபுரம் 6.8, செம்மேடு 6.6, கெடார் 6.5, வல்லம் 4.8, மணம்பூண்டி 4.7, அவலுார்பேட்டை, முகையூர் 4.2, வளத்தி 4, அரசூர் 3.4, திருவெண்ணெய்நல்லுார் 2.1, செஞ்சி 1.9 செ.மீ மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரி 6.7 செ.மீ., ஆகும்.



-நமது நிருபர்-






      Dinamalar
      Follow us