/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காரில் மதுபாட்டில் கடத்திய 3 பேர் கைது
/
காரில் மதுபாட்டில் கடத்திய 3 பேர் கைது
ADDED : செப் 08, 2025 11:23 PM

விழுப்புரம் : திண்டிவனம் அருகே காரில் மதுபாட்டில் கடத்திய மூவரை போலீசார் கைது செய்து, 173 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திண்டிவனம் அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் உள்ள மதுவிலக்கு சோதனை சாவடியில், மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரிலிருந்த இருந்த மூவரிடம் நடத்திய விசாரணையில், செங்கல்பட்டு, திருமணி பகுதியை சேர்ந்தவர்கள் ஏழுமலை மகன் சாரதி, 27; பாபு மகன் பிரவீன், 28; ராய் மகன் ராபின், 27; ஆகி யோர் என்பதும், புதுச்சேரியில் இருந்து செங்கல்பட்டிற்கு மதுபானம் கடத்தி செல்வது தெரியவந்தது.
மூவரையும் போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய கார், 173 புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசாரிடம் ஒப்படைத்தனர்.