ADDED : ஜன 17, 2026 05:42 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் சிக்னல் சந்திப்பு பகுதியில், மேற்கு சப் இன்ஸ்பெக்டர் சுதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெரியதச்சூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 43; மினி டெம்போ வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்தார்.
இதனையடுத்து, பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டி வந்ததாக அவர் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.
இதே போல், மேற்கு சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வேகமாக வந்த கெடாரைச் சேர்ந்த பாலகணபதி மகன் ரோஷித், 18; என்பவரை கைது செய்தனர்.
இதே போல், அரகண்டநல்லுாரில் அதிவேகமாக பைக் ஓட்டிச்சென்ற கல்யாணம்பூண்டியைச் சேர்ந்த பழனி மகன் கண்ணன்,26; மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
