sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போலீஸ்காரரை கத்தியால் கிழித்த 3 பேர் கைது

/

போலீஸ்காரரை கத்தியால் கிழித்த 3 பேர் கைது

போலீஸ்காரரை கத்தியால் கிழித்த 3 பேர் கைது

போலீஸ்காரரை கத்தியால் கிழித்த 3 பேர் கைது


ADDED : செப் 30, 2025 05:51 AM

Google News

ADDED : செப் 30, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆயுதப்படை போலீஸ்காரரை கத்தியால் கிழித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த முட்ராம்பட்டைச் சேர்ந்தவர் நரசிம்மராஜ், 30; விழுப்புரம் ஆயுதப்படை போலீஸ்காரர்.

இவர், நேற்று முன்தினம் இரவு 1:00 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து நுழைவு வாயில் வழியாக பைக்கில் வெளியில் வந்தார்.

அப்போது, விழுப்புரம் வரதப்பநாயக்கன் தோப்பைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் பரத் என்கிற ராஜமாணிக்கம், 19; மணிகண்டன் மகன் அபிஷேக், 18; ஹரிபாபு மகன் சஞ்சீவி, 21; ஆகியோர் ஒரே பைக்கில் நரசிம்மராஜ் பைக்கை மோதுவது போல் வந்தனர்.

அப்போது, மெதுவாக செல்லுமாறு கூறிய நரசிம்மராஜிடம், பரத் உள்ளிட்ட 3 பேரும் தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக திட்டினர்.

பின் பரத், அபிஷேக் ஆகியோர் பைக்கில் வைத்திருந்த கத்தியால் நரசிம்மராஜின் இடது கையில் கிழித்துவிட்டு 3 பேரும் தப்பிச் சென்றனர்.

இதில், காயடைந்த நரசிம்மராஜ், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து பரத் உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us