/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காரில் மதுபாட்டில்கள் கடத்தல் வளவனுார் அருகே 3 பேர் கைது
/
காரில் மதுபாட்டில்கள் கடத்தல் வளவனுார் அருகே 3 பேர் கைது
காரில் மதுபாட்டில்கள் கடத்தல் வளவனுார் அருகே 3 பேர் கைது
காரில் மதுபாட்டில்கள் கடத்தல் வளவனுார் அருகே 3 பேர் கைது
ADDED : நவ 01, 2025 03:24 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வளவனுார் இன்ஸ்பெக்டர் அருள்செல்வம், தலைமை காவலர்கள் ராமச்சந்திரன், சரண்ராஜ் ஆகியோர், நேற்று அதிகாலை வளவனுார் அருகே லிங்காரெட்டிபாளையம் பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, புதுச்சேரியிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வந்தது தெரிந்தது.
விசாரணையில், புதுச்சேரி மாநிலம் வில்லியனுார் அருகே மேல்கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த இருசப்பன் மகன் ஆனந்தகுமார்,29; மற்றும் வைத்தியலிங்கம் மகன் சிவசங்கர், 28; ஆகிய இருவரும், விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த ரவி மகன் விஜய்,30; என்பவருக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து, மது பாட்டில் கடத்திய கார், 900 மதுபாட்டில்கள், 20 லிட்டர் சாராயம், 3,400 ரூபாய் ஆகியவற்றை
பறிமுதல் செய்த போலீசார், ஆனந்தகுமார், சிவசங்கர், விஜய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.