ADDED : ஜூலை 05, 2026 03:31 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பொதுவழிப் பாதை குறித்து, இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோத தகராறில், 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த ஆனாங்கூரைச் சேர்ந்தவர் ரஞ்சித், 36; எதிர்வீட்டைச் சேர்ந்தவர் வீரபாலன், 42; இருவரது குடும்பத்திற்கும், வீட்டின் அருகே பாதையில் செல்வதில் பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
கடந்த 29ம் தேதி ரஞ்சித் வீட்டிற்கு பின் பகுதியில் உள்ள தோப்பு பகுதிக்கு, வீரபாலன் குடும்பத்தினர் இயற்கை உபாதைக்காக சென்று வந்துள்ளனர்.
இதனை ரஞ்சித் மனைவி அஞ்சலி, 34; தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டு, இரு குடும்பத்தினரும் தாக்கிக்கொண்டனர்.
இது குறித்து இரு தரப்பு புகாரின் பேரில், வீரபாலன், ரஞ்சித் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து, வீரபாலன், ரஞ்சித், அஞ்சலி, 34; ஆகியோரை கைது செய்தனர்.
