UPDATED : நவ 24, 2026 09:57 PM
ADDED : நவ 24, 2026 09:42 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: போதையில் ஏற்பட்ட தகராறு, தொடர்பாக, 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டை சேர்ந்தவர் முருகன் மகன் அருண்குமார், 31; இவர், கடந்த இரு தினங்களுக்கு முன், தனது வீட்டின் அருகே நடந்து சென்றார்.
அப்போது, அங்கு மதுபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த சந்திரபாலன் மகன்கள் சரத்பாபு, 30; சரத்குமார், 35; ஆகியோர், வீண் தகராறு செய்து, அருண்குமாரை தாக்கினர். இதனால், கோபமடைந்த அருண்குமார், அவர்களை திருப்பி தாக்கினார்.
இது குறித்து, இரு தரப்பினர் அளித்த புகார்களின் பேரில், சரத்பாபு, சரத்குமார், அருண்குமார் ஆகியோர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
