ADDED : ஜூலை 23, 2025 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே தீ விபத்தில் 3 கூரை வீடுகள் சேதமாயின.
காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 70; கூலித் தொழிலாளி. இவரது கூரை வீடு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீ பிடித்து எரிந்தது. உடன் வீட்டினுள் துாங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே வந்தனர்.
காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த கூத்தன், நீலாவதி ஆகியோர் வீடுகளுக்கும் தீ பரவியது.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 3 வீடுகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.