ADDED : அக் 10, 2025 03:39 AM
திருவெண்ணெய்நல்லுார்: ஆனத்துார் மற்றும் அண்டராயநல்லுார் கிராம பகுதி ஆற்றில் மணல் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மலட்டாறில் மணல் கடத்திய இருவர் போலீசாரை கண்டதும், வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர்.
இதேபோல ஆண்ட்ராயநல்லுார் பகுதி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர்கள், அதை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டனர். அந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், ஆனத்துார் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் திருமுருகன், 29; மற்றும் பார்த்திபன் மகன் அருணாச்சலம், 25; அண்டராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் சிவகுரு,32; என விசாரணையில் தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர்.