/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கார் கவிழ்ந்து விபத்து தம்பதி உட்பட 3 பேர் காயம்
/
கார் கவிழ்ந்து விபத்து தம்பதி உட்பட 3 பேர் காயம்
ADDED : ஏப் 04, 2025 04:33 AM
திண்டிவனம்: திண்டிவனம் புறவழிச்சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் கார் சறுக்கி கவிழ்ந்ததில் கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.
சென்னை அடுத்த மணிமங்கலத்தைச் சேர்ந்தவர் பரணிதரன், 44; இவர், அதே பகுதியில் கால்நடை மருந்தகம் வைத்து நடத்தி வருகிறார்.
இவரது மனைவி சத்தியா, 39; மகள் ஐஸ்வர்யா, 11; நேற்று காலை 3 பேரும் மணிமங்கலத்திலிருந்து சொந்த ஊரான கும்பகோணத்திற்கு ஸ்விப்ட் காரில் சென்றனர்.
காலை 8:30 மணியளவில், திண்டிவனம் புறவழிச்சாலையில் நத்தமேடு பகுதி வழியாக வந்த போது, அப்பகுதியில் பெய்த கனமழையால் சாலையில் குளம் போல் தேங்கியிருந்த பகுதியை கடந்தபோது, கட்டுபாட்டை இழந்த கார், நீரில் சறுக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பரணிதரன் உட்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். உடன், திண்டிவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக திண்டிவனம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

