/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பங்க் கடையில் குட்கா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது
/
பங்க் கடையில் குட்கா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது
ADDED : மார் 19, 2024 10:50 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் பங்க் கடை யில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, விழுப்புரம் நான்கு முனை சாலை சந்திப்பில், பங்க் கடை நடத்தி வரும் அலுமேலுபுரத்தைச் சேர்ந்த ராஜாராம், 62; என்பவரது கடையில் குட்கா விற்றது தெரிந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல், விழுப்புரம் மேல்தெரு பிள்ளையார்கோவில் சந்திப்பு பகுதியில், பெட்டிக் கடையில் குட்கா விற்ற விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த மணிகண்டன், 30; என்பவரையும் கைது செய்தனர்.
இதேபோன்று, விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது, விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் பங்க் கடை வைத்துள்ள நமச்சிவாயம் மனைவி விஜயா என்பவரது கடையில் சோதனையிட்டனர். அப்போது, குட்கா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து, விஜயா, 57; மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.

