/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டு சிலிண்டரில் தீ பிடித்து 3 பேர் காயம்
/
வீட்டு சிலிண்டரில் தீ பிடித்து 3 பேர் காயம்
ADDED : மார் 21, 2024 12:13 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே காஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் தீக்காயமடைந்தனர்.
விழுப்புரம் அடுத்த சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் ஆதவன், 35; இவரது வீட்டில், நேற்று முன்தினம் புதிய சமையல் காஸ் சிலிண்டர் வாங்கியுள்ளனர்.
அந்த புதிய சிலிண்டரில் ஆதவனின் நண்பர் தினேஷ், ரெகுலேட்டரை பொறுத்திய போது திடீரென தீப்பிடித்துள்ளது.
அதில், தினேஷ், அருகிலிருந்த ஆதவனின் மனைவி பொற்செல்வி, அவரது தாயார் லலிதா உள்ளிட்டோர் மீது, தீ பரவி தீக்காயம் அடைந்தனர். உடனே அவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

