/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பஸ் மோதி 3 பேர் படுகாயம்
/
அரசு பஸ் மோதி 3 பேர் படுகாயம்
ADDED : டிச 21, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த தளவானுாரைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன், 34; இவர், தனது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த தாமரைகனி, 36; தென்காசி மாவட்டம், செங்கோட்டை அடுத்த மேலுாரைச் சேர்ந்த மன்சூர், 30; ஆகியோருடன், நேற்று மதியம் விழுப்புரம் அருகே ஜானகிபுரம் காய்கறி மார்க்கெட்டு பைக்கில் சென்றார்.
ஜானகிபுரம் பைபாஸ் மேம்பாலம் அருகே திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. அதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். உடன் 3 பேரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

