ADDED : ஜன 16, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : காணை பகுதியில் பங்க் கடையில் குட்கா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த காணை பகுதியில், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் பிற்பகல் ரோந்து சென்றனர்.
அப்போது, பள்ளியந்துார் பிள்ளையார் கோவில் தெருவில் பங்க் கடையில் குட்கா விற்ற சம்பத் மனைவி அமிர்தம், 45; மற்றும் காணை அடுத்த பெரும்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவில் தில்லை கோவிந்தன், 60; அதேபோல் கப்பூர் பகுதியில் மகேஷ், 25; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.