/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மர்ம விலங்கு கடித்ததில் 3 ஆடுகள் பலி
/
மர்ம விலங்கு கடித்ததில் 3 ஆடுகள் பலி
ADDED : செப் 03, 2025 07:28 AM

மயிலம் : ஆசூர் கிராமத்தில் மர்ம விலங்கு கடித்ததில் 3 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
மயிலம் ஒன்றியம், ஆசூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம விலங்கு கடித்ததில், அப்பகுதியை சேர்ந்த, காசியப்பன் 60; என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகள் பலியாகின.
இது குறித்து கிராம மக்கள் திண்டிவனம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி தலைமையில், அலுவலர் புவனேஷ், கால்நடை மருத்துவர் உள்ளிட்டோர், மர்ம விலங்கின் கால் தடயங்களை பதிவு செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இறந்த 3 ஆடுகளையும் கால்நடை மருத்துவர் நிவேதா தலைமையில் பிரேத பரிசோதனை செய்த பின்னர் அருகில் புதைத்தனர். மேலும், ரெட்டணை, ஆசூர் பகுதியில் கிராமத்தில் வனத்துறை, கால்நடை வளர்ப்பு துறை சார்பில் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர்.