/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனந்தபுரத்தில் 30 மி.மீ., மழை பதிவு
/
அனந்தபுரத்தில் 30 மி.மீ., மழை பதிவு
ADDED : நவ 25, 2025 04:45 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக அனந்தபுரத்தில் 30.40 மி.மீ., மழை பதிவாகியது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மழை பெய்ய துவங்கியது. அதிகாலை 5:00 மணி வரை மழை நீடித்ததால், தாழ்வான பகுதிகள் மற்றும் விழுப்புரத்தில் புதிய பஸ் நிலையம், கீழ்பெரும் பாக்கம் தரைபாலம், பள்ளம் நிறைந்த குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தொடர்ந்து காலை 7:00 மணிக்கு பிறகு விட்டுவிட்டு மழை பெய்தது.
விழுப்புரத்தில் 9.20 மி. மீ., மழையும், கோலிய னுார் 22, வளவனுார் 20, கெடார் 12, முண்டியம்பாக் கம் 24, சூரப்பட்டு 13, வானுார் 27, திண்டிவனம் 18.20, மரக்காணம் 2, அனந்தபுரம் 30.40, மணம்பூண்டி 8, முகையூர் 12, அரசூ ர் 4, திருவெண்ணெய்நல்லுார் 2, உட்பட மொத்தம் 203.80 மி.மீ., மழை பதிவாகியது. இதன் மூலம் மாவட்டத்தில் சராசரியாக 9.70 மி.மீ., மழை பதிவானது.

