/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.3.38 கோடியில் மலட்டாறில் மேம்பாலம் அடிக்கல் நாட்டு விழாவுடன் பணி துவக்கம் பில்லுாரில் 30 ஆண்டு மக்கள் பிரச்னைக்கு தீர்வு

ADDED : பிப் 17, 2024 05:23 AM

விழுப்புரம் விழுப்புரம் அருகே மலட்டாற்றில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
விழுப்புரம் அடுத்த தளவானுார் பகுதியில், தென்பெண்ணையாற்றில் இருந்து, மலட்டாறு பிரிந்து வளவனூர் வழியாக புதுச்சேரி பகுதிக்குச் செல்கிறது. ஆண்டு தோறும் தென்பெண்ணை ஆற்றில் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதும், சாத்தனுார் அணை நீர் வரும்போதும், மலட்டாற்றில் வெள்ளம் புரண்டோடும்.
இதனால், விழுப்புரம் அருகே பில்லுார் - சேர்ந்தனுார் பகுதியில் இருந்த பழைமையான மலட்டாறு தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படும்.
இதனால், பில்லுார், சேர்ந்தனுார் அரசமங்கலம், குச்சிப்பாளையம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்களும், மாணவர்களும் விழுப்புரம், பண்ருட்டி பகுதிகளுக்கு சென்றுவர 8 கி.மீ தொலைவில் பண்ருட்டி நெடுஞ்சாலைக்கு சென்று, விழுப்புரம் பகுதிக்கு திரும்பி வரும் நிலை தொடர்ந்து வருகிறது.
இதனால், அந்த பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என, கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன் பேரில், பில்லுார் - சேர்ந்தனுார் இடையே மலட்டாற்றில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட அரசு, நெடுஞ்சாலைத்துறை மூலம் 8 கோடியோ 38 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. லட்சுமணன் எம்.எல்.ஏ., பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, முருகவேல், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.