/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு
/
அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு
அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு
அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூன் 12, 2025 12:24 AM
விழுப்புரம் : அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நாளை 13ம் காலை 10:00 மணியளவில் பி.காம்., பி.எஸ்.சி., கம்யூட்டர் சையின்ஸ், பி.எஸ்.சி., வேதியியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மூன்றாம் கட்ட சிறப்பு கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் தரவரிசை மதிப்பெண் 400 முதல் 220 வரை உள்ள பி.சி., - பி.சி.எம்., - எஸ்.சி.ஏ., - எஸ்.டி., ஆகிய பிரிவு மாணவ, -மாணவிகள் உரிய சான்றிதழ் அசல் மற்றும் நகலுடன் கலந்து கொள்ளலாம்.
பி.ஏ., அரசியல் அறிவியல், பி.பி.ஏ., ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மட்டும் தரவரிசை 220 முதல் 200 மதிப்பெண் வரை உள்ள அனைத்துப்பிரிவு மாணவர்களும் நாளை காலை 10:00 மணியளவில் நடக்கும் மூன்றாம் கட்ட கலந்தாய்வில் உரிய சான்றிதழ்களோடு கலந்துகொள்ளலாம்,
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.