ADDED : டிச 24, 2024 06:10 AM
விழுப்புரம்: கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, போது, மோட்சகுளம் விநாயகர் கோவில் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் உதயபாரதி,19; புதுச்சேரி ரவி, 25; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி: கள்ளக் குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அப்போது, அம்மன் நகரில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே, கஞ்சா விற்றுக் கொண்டிருந்த விளாந்தாங்கல் ரோட்டை சேர்ந்த வெங்கடேசன் மகன் ராஜா (எ) குழந்தைவேல், 35; நுார் முகமது மகன் முகமது அக்பர் அலி, 49; ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த 50 கிராம் கஞ்சா, மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வளவனுார் மற்றும் கள்ளக்குறிச்சி போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்த, 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.