/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 4 பேர் கைது
/
போதை மாத்திரை விற்பனை திண்டிவனத்தில் 4 பேர் கைது
ADDED : டிச 21, 2024 06:38 AM

திண்டிவனம் : திண்டினத்தில் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டிவனம் டி.எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, காவேரிப்பாக்கம் ஏரிக்கரை அருகே பாழடைந்த ரைஸ் மில் அருகே நின்றிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம், 90 போதை மாத்திரை மற்றும் 3 சிரஞ்சி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த ரொக்கம் ரூ.16,200; மூன்று மொபைல் போன், மற்றும் இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர்கள் திண்டிவனம் கிடங்கல் இரண்டு ,பெருமாள் கோவில் தெரு மோகன் மகன் வீரா,29; எம்.ஜி.ஆர். தெரு செல்வம் மகன் ஷியாம்,21; வாணிய பிள்ளையார் கோவில் தெரு நாகரத்தினம் மகன் விஜய், 29; இறையானுார், மாரியம்மன் கோவில் தெரு குமார் மகன் ஸ்ரீதர், 24; என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்த, 4 பேரையும் கைது செய்த, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.