UPDATED : நவ 11, 2026 04:49 PM
ADDED : நவ 11, 2026 04:40 PM
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அவலுார்பேட்டை அடுத்த கொரட்டு குப்பம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சிவகுமார், 28; கோவில்புரையூரில் உள்ள இவரது நிலத்தில் , கடந்த 9 ம்தேதி காலை 8;00, மணிக்கு விவசாய வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கோவில்புரையூரை சேர்ந்த 4 நபர்கள் சிவகுமாரை ஆபாசமாக திட்டி, டிராக்டரை அத்து மீறி நுழைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இவர்களுக்குள் நிலம் சம்மந்தமாக முன்விரோத தகராறு இருந்துள்ளது .
புகாரின் பேரில் கிருஷ்ணன் மகன் ஏழுமலை 30, கிருஷ்ணன், 55, வேடி மகன் சின்னதுரை, 47, ஏழுமலை மகன் ராஜா,35 ஆகிய 4 பேர் மீதும் அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
