தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பைக்குகள் மோதி தொழிலாளி பலி 4 பேர் படுகாயம்

பைக்குகள் மோதி தொழிலாளி பலி 4 பேர் படுகாயம்

பைக்குகள் மோதி தொழிலாளி பலி 4 பேர் படுகாயம்


ADDED : நவ 12, 2026 09:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2026 09:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அருகே, பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

செக்கடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த வேலு மகன் தமிழ்ச்செல்வன், 52; கூலி தொழிலாளி.

இவர் பைக்கில் நேற்று (நவ.,11) இரவு சொந்த வேலை காரணமாக எய்யில் கிராமத்திற்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

பைக்கின் பின்னால், அதே ஊரை சேர்ந்த குப்புசாமி, அர்ஜூனன் ஆகியோரை உட்கார வைத்து, பைக்கை ஓட்டி வந்தார்.

அப்போது, பழம்பூண்டி கூட்ரோடு அருகே எதிரே வந்த, மணிகண்டன் என்பவரின் பைக் தமிழ்ச்செல்வன் பைக் மீது எதிர்பாராமல் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த தமிழ்ச்செல்வனை சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.

மேலும் விபத்தில் காயமடைந்த அர்ஜூனன், 56; குப்புசாமி, 60; மணிகண்டன், 34; பிரபு, 32; ஆகியோர் சேத்பட், ஜெர்மன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us