ADDED : மார் 24, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் சுபஆனந்தன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் கே.கே. ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, இடுகாடு முக்தி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மூட்டை மணி, 25; சக்திவேல், 25; உதயா,19; தமிழ்ச்செல்வன்,19; ஆகியோரை கைது செய்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.