/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் நீரில் மூழ்கி 4 பேர் பரிதாப பலி
/
கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் நீரில் மூழ்கி 4 பேர் பரிதாப பலி
கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் நீரில் மூழ்கி 4 பேர் பரிதாப பலி
கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் நீரில் மூழ்கி 4 பேர் பரிதாப பலி
ADDED : டிச 16, 2024 02:21 AM

வானுார்: விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் அடுத்த பழைய கொஞ்சிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நர்மதா, 17; புதுக்குப்பம் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
அதே பள்ளியில் படித்தவர் அனுஸ்ரீ, 16, நரேஷ், 10. மூவரும், கிளியனுார் அடுத்த புதுக்குப்பம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் கொஞ்சிமங்கலம் ஓடையில் குளித்தனர்.
களிங்கலுக்கு செல்லும் ஓடையை நர்மதா, அனுஸ்ரீ ஆகிய இருவரும் கடக்க முயன்றபோது, வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். ஊர் மக்கள், நர்மதாவை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே நர்மதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அனுஸ்ரீயை வானுார் தீயணைப்பு நிலையத்தினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிளியனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த வேம்பியை சேர்ந்தவர் வெங்கடேசன், 57; சலவை தொழிலாளி. இவர், நேற்று மதியம், 12:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள ஏரியில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, தண்ணீரில் மூழ்கி இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 60; கூலித்தொழிலாளி.
இவர், நேற்று முன்தினம், அங்குள்ள ஏரியில் தவறி விழுந்து இறந்தார். வளவனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கள்ளிப்பாடியை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் சக்திவேல், 14; எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று காலை நண்பர்களுடன் கள்ளிப்பாடி வெள்ளாற்று தடுப்பணையில் குளிக்க சென்றார்.
அப்போது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார்.
தீயணைப்பு வீரர்கள், ஆற்றின் நடுவில் முட்புதரில் சிக்கியிருந்த சக்திவேல் உடலை மீட்டனர். ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரிக்கின்றனர்.