sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 வாலிபர் கொலை வழக்கு சிறுவன் உள்ளிட்ட 4 பேர் கைது

/

 வாலிபர் கொலை வழக்கு சிறுவன் உள்ளிட்ட 4 பேர் கைது

 வாலிபர் கொலை வழக்கு சிறுவன் உள்ளிட்ட 4 பேர் கைது

 வாலிபர் கொலை வழக்கு சிறுவன் உள்ளிட்ட 4 பேர் கைது


ADDED : பிப் 19, 2026 06:56 AM

Google News

ADDED : பிப் 19, 2026 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே தலையில் கல்லைபோட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அருகே அகூர் கிராமத்தை சேர்ந்த எமராஜ் மகன் சசிகுமார், 22; இரும்பு வியாபாரி. கடந்த 30ம் தேதி அகூரிலுள்ள வீட்டை விட்டு வெளியே சென்றவரை காணவில்லை. இதனிடையே, நேற்று முன்தினம் அகூர் அருகே பந்தக்கல்லு என்ற பகுதியில் அழுகிய நிலையில் சசிகுமார் உடல் கிடந்தது.

வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், கடந்த 30ம் தேதி மாலை சசிகுமாரை, வடசிறுவளூரை சேர்ந்த சக்திவேல் மகன் ஜெகதீசன் உள்ளிட்ட சிலர் சசிகுமாரை பைக்கில் அழைத்து சென்றது தெரியவந்தது. அதையடுத்து, ஜெகதீசனை பிடித்து விசாரணை நடத்தியதில், ஜெகதீசன் காதலியை பற்றி சசிகுமார் தவறாக பேசியதால், நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து, உடலை பந்தக்கல்லு என்ற இடத்தில் பாறைகளுக்கு இடையில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

அதன்பேரில், ஜெகதீசன் மற்றும் வடசிறுவளூரை சேர்ந்த ஏழுமலை மகன் ஜெகன்குமார், 20; ஏழுமலை, 20; அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். 17 வயது சிறுவனை தவிர மற்ற மூன்று பேரும் திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவன் விழுப்புரம் சீறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us