/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏர் சிலிண்டர் வெடித்து 4 பேர் படுகாயம்
/
ஏர் சிலிண்டர் வெடித்து 4 பேர் படுகாயம்
ADDED : ஜன 04, 2025 06:48 AM

திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அருகே நடமாடும் பஞ்சர் ஒட்டும் ஏர் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்தவர் நடனம், 60; இவர் நடமாடும் பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை டி.புதுப்பாளையத்தை சேர்ந்த ஐயப்பன்,37: என்பவரின் டிராக்டருக்கு பஞ்சர் ஒட்ட சென்றார். அங்கு பஞ்சர் ஒட்டி முடித்துவிட்டு, காற்று பிடித்தபோது ஏர் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
அதில், நடனம், ஐயப்பன்,டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த அபிரகாம்,40;  வி.அய்யப்பன்,32;ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும்  108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருவெண்ணைநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

