ADDED : டிச 27, 2024 06:49 AM
வானுார்: திண்டிவனம் -புதுச்சேரி பைபாஸ் சாலை இரு சக்கர வாகனத்தில் கார் மோதி 4 பேர் காயமடைந்தனர்.
பெங்களூருவை சேர்ந்தவர் சுமித்தி பட்டாச்சா. இவர் தனது குடும்பத்தினருடன், புதுச்சேரியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு, காரில் வந்து கொண்டிருந்தார். காரை சுமித்தி பட்டாச்சா, ஓட்டி வந்தார்.
நேற்று காலை 12:00 மணிக்கு, புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலையில், மொளசூர் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த பைக் மீது மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், சுமித்தி பட்டாச்சா, அவரது மனைவி ேஷாபா உட்பட நால்வர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த கிளியனுார் போலீசார் காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிளியனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.