/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம்
/
பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம்
பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம்
பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம்
ADDED : பிப் 04, 2024 04:35 AM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தை உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
திண்டிவனம், ஜக்காம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சனேஸ்வரன், 35; இவர், நேற்று தனது மனைவி சுபா, 25; மகன் சக்திவேல், 1; மற்றும் தனசேகர் மனைவி சுலோச்சனா, 50; ஆகியோருடன் இண்டிகா விஸ்டா காரில் சென்னை சென்றார். காரை மஞ்சனேஸ்வரன் ஓட்டினார்.
திண்டிவனம் அடுத்த சாரம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார், மோதியதில் நிலை தடுமாறி சாலையோரம் பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
இதில், காரில் சென்ற நான்கு பேரும் படுகாயமடைந்தனர். உடன் அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்த குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.