/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒரே நாளில் 4 பாம்புகள் பிடிப்பு
/
ஒரே நாளில் 4 பாம்புகள் பிடிப்பு
ADDED : ஜூன் 22, 2025 01:41 AM
திண்டிவனம் : திண்டிவனம் பகுதியில் ஒரே நாளில் நீதிபதி குடியிருப்பு உட்பட 4 இடங்களில் புகுந்த பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.
திண்டிவனம் அடுத்த எறையானுார் குளூனி விடுதியில் நேற்று காலை பாம்பு புகுந்ததாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. சிறப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சேவியர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, விடுதி வளாகத்தில் இருந்த 4 அடி நாக பாம்பை மீட்டனர். தொடர்ந்து, ஜக்காம்பேட்டையில் நீதிபதி குடியிருப்பு கழிவறைக்குள் புகுந்த கொம்பேறிமூக்கன் பாம்பை மீட்டனர்.
இதே போன்று கொள்ளார் பகுதியில் வெங்கேடசன் என்பவரது வீட்டிற்குள் புகுந்த 5 அடி நாக பாம்பையும், சின்ன நெற்குணம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள நாக பாம்பையும் பிடித்தனர்.
ஒரே நாளில் நான்கு இடங்களில் இருந்து பாம்புகளை மீட்டு காப்பு காட்டில் விட்டனர்.