/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பூட்டை உடைத்து 4 சவரன் நகை திருட்டு
/
பூட்டை உடைத்து 4 சவரன் நகை திருட்டு
ADDED : மே 07, 2025 11:53 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் சந்தானகோபாலபுரத்தை சேர்ந்தவர் செல்வம் மனைவி கஸ்துாரி, 61; இவர் உடல்நிலை சரியில்லாததால், கடந்த 29ம் தேதி முதல் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கஸ்துாரியின் மகள் சேர்ந்தனுார் கதிரவன் மனைவி தமிழரசி, 32; கடந்த 5ம் தேதி கஸ்துாரி வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு சென்றார்.
நேற்று காலை வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 4 சவரன் நகைகள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விழுப்புரம் டவுன் போலீசார் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.