/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரு தரப்பினர் மோதல் 4 வாலிபர்கள் கைது
/
இரு தரப்பினர் மோதல் 4 வாலிபர்கள் கைது
ADDED : மே 05, 2025 05:30 AM
விழுப்புரம் :விழுப்புரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரை கைது செய்தனர்.
விழுப்புரம், சித்தேரிக்கரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் சுதேஷ்குமார், 20; முத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் விக்னேஷ், 22; இருவரும் ஒரே கடையில் நகை செய்யும் வேலை செய்து வருகின்றனர்.
இருவரும் நட்பாக பழகிய நிலையில், விக்னேஷின் நடவடிக்கை பிடிக்காததால் சுதேஷ்குமார் அவரை கண்டித்தார். இதனால், இருவருக்குமிடையே பிரிவு ஏற்பட்டது.
இந்நிலையில், சம்பவத்தன்று இருவரும் இரு தரப்பினராக மாறி தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், விக்னேஷ், சுதேஷ்குமார், சிவசக்தி, கஜேந்திரன், யுவராஜ், பாலா, சதீஷ், நரேன் உட்பட 12 பேர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் மீது வழக்குப் பதிந்து, விக்னேஷ், சிவசக்தி, 20; கிஷோர், 27; சுதேஷ்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.