/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய அரசை கண்டித்து 4 இடங்களில் மறியல் விவசாய சங்கம், தொழிற்சங்கத்தினர் 403 பேர் கைது
/
மத்திய அரசை கண்டித்து 4 இடங்களில் மறியல் விவசாய சங்கம், தொழிற்சங்கத்தினர் 403 பேர் கைது
மத்திய அரசை கண்டித்து 4 இடங்களில் மறியல் விவசாய சங்கம், தொழிற்சங்கத்தினர் 403 பேர் கைது
மத்திய அரசை கண்டித்து 4 இடங்களில் மறியல் விவசாய சங்கம், தொழிற்சங்கத்தினர் 403 பேர் கைது
ADDED : பிப் 17, 2024 05:37 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், மத்திய அரசை கண்டித்து 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 403 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது.
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சகாபுதின், தமிழக விவசாயிகள் சங்கம் முருகன், தாண்டவராயன், சிவராமன், விவசாய விடுதலை முன்னணி அம்பேத்கர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் இளங்கோ முன்னிலை வகித்தனர்.
டில்லியில் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிபடுத்த வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதியம் 12:00 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்ளிட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தலைமை தபால் நிலையம் முன் மத்திய தொழிற் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் 12:15 மணிக்கு மறியல் நடந்தது. சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் முத்துக்குமரன், தொ.மு.ச., ஞானபிரகாசம், ஏ.ஐ.டி.யூ.சி., சவுரிராஜன் முன்னிலை வகித்தனர். உடன், மறியலில் ஈடுபட்ட 55 பெண்கள் உள்ளிட்ட 205 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே, அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தினர் பிற்பகல் 1:00 மணிக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். உடன், மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவலுார்பேட்டை
அவலுார்பேட்டை கடைவீதியில் நடந்த மறியல் போராட்டத்திற்கு, விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட மா.கம்யூ., வட்ட செயலாளர் முருகன் உட்பட மறியலில் ஈடுபட்ட 48 பேரை அவலுார்பேட்டை போலீசார் கைது செய்தனர்.