/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர் 45 பேர் கைது
/
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர் 45 பேர் கைது
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர் 45 பேர் கைது
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர் 45 பேர் கைது
ADDED : பிப் 17, 2024 11:45 PM

விழுப்புரம்: மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து விழுப்புரத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர் 45 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுமென மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்தார்.
அதன்படி, விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கரும்பு, நெல் பயிர்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும். விவசாயம் செய்யும் முதியோர்களுக்கு மாதம் 6,000 ரூபாய் வழங்கிட வேண்டும்.
டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்தும், மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
அதன்படி நேற்று மதியம் 12:00 மணிக்கு விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, எல்.ஐ.சி., அலுவலகம் முன், மாநிலச் செயலாளர் அய்யனார், மாவட்ட துணைத் தலைவர் குமார் தலைமையில் விவசாயிகள் 50 பேர் ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
வழியில், இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி மாநில செயலாளர் உட்பட 45 பேரை கைது செய்தனர். முன்னதாக, ரயில்வே போலீசார் உட்பட ஏராளமான போலீசார், ரயில் நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.