/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துணை முதல்வர் பிறந்தநாள் விழா எம்.எல்.ஏ., உட்பட 490 பேர் ரத்த தானம்
/
துணை முதல்வர் பிறந்தநாள் விழா எம்.எல்.ஏ., உட்பட 490 பேர் ரத்த தானம்
துணை முதல்வர் பிறந்தநாள் விழா எம்.எல்.ஏ., உட்பட 490 பேர் ரத்த தானம்
துணை முதல்வர் பிறந்தநாள் விழா எம்.எல்.ஏ., உட்பட 490 பேர் ரத்த தானம்
ADDED : நவ 27, 2025 04:54 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க., வினர் 490 பேர் ரத்த தானம் வழங்கினர்.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதியின் 49வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நேற்று நடந்தது. விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., ரத்த தானம் வழங்கி, முகாமை துவக்கி வைத்தார். இதில் 490 பேர் ரத்ததானம் வழங்கினர்.
தி.மு.க., மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் கண்ணப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து, பிரேமா குப்புசாமி, கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், தலைமை கழக வழக்கறிஞர் சுவைசுரேஷ் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர்கள் சக்கரை, வெற்றிவேல், ஜெயமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, முருகவேல், பிரபாகரன், ராஜா, சந்திரசேகர், செல்வமணி, கணேசன், சீனுசெல்வரங்கன், மைதிலி ராஜேந்திரன், பாஸ்கர், புஷ்பராஜ், கோலியனூர் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், பேரூராட்சி செயலாளர் ஜீவா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி குழுவினர் ரத்த தானம் பெற்று, அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினர்.

