தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விதிமுறை மீறி இயக்கப்பட்ட 5 ஆட்டோக்கள் பறிமுதல்

 விதிமுறை மீறி இயக்கப்பட்ட 5 ஆட்டோக்கள் பறிமுதல்

 விதிமுறை மீறி இயக்கப்பட்ட 5 ஆட்டோக்கள் பறிமுதல்


ADDED : பிப் 07, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 04:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் விதிமுறைகளை மீறியதாக 4 ஆட்டோக்கள், ஒரு ஷேர் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் நகரில் பல்வேறு இடங்களில், வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் மேற்பார்வையில், நேற்று வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம், சென்னை நெடுஞ்சாலை, நான்குமுனை சந்திப்பு, கிழக்கு பாண்டி சாலை, ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேவல், போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமாரராஜா வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அரசு அனுமதித்ததைவிட கூடுதலாக பயணிகளை ஏற்றி வந்ததாக 4 ஆட்டோக்கள், ஒரு ஷேர் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை போக்குவரத்து போலீசார், விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

வாகனங்களுக்கான ஒரிஜினல் ஆவணங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்து, உரிய அபராத தொகையை செலுத்திய பின், வாகனங்கள் விடுவிக்கப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us