UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 03:34 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடனை திருப்பிக் கேட்டவரை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த டி.மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யநாராயணன், 43; இதே கிராமத்தைச் சேர்ந்த சங்கர். நண்பர்கள். சங்கர், கடந்த ஓராண்டிற்கு முன் சத்யநாராயணனிடம், 22 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இந்த பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். கடந்த 28 ம் தேதி சத்யநாராயணன், சங்கரிடம் பணத்தை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர் மற்றும் இவர் குடும்பத்தார் சிவா, சிவராஜ், அமுதா ஆகியோர் சத்யநாராயணனை தாக்கினர்.
புகாரின் பேரில், சங்கர் உட்பட 5 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
