/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயிலில் கஞ்சா கடத்தல் 5 வாலிபர்கள் கைது
/
ரயிலில் கஞ்சா கடத்தல் 5 வாலிபர்கள் கைது
ADDED : பிப் 08, 2026 03:57 AM

விழுப்புரம்: வெளி மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் விழுப்புரத்திற்கு கஞ்சா கடத்தி வந்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மேற்குவங்க மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக விழுப்புரம் எஸ்.பி., சாய் பிரனீத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார், ரயில் நிலைய பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 6 பேரை சுற்றி வளைத்த போது, ஒருவர் தப்பியோடினார். பிடிபட்ட 5 பேர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில், கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள், விழுப்புரம், கே.கே., ரோடு, மணி நகர் குமரன் மகன்கள் யஷ்வந்த், 20; ஹரிஷ், 22; திருவெண்ணெய்நல்லுார் அடுத்தி பேரங்கியூர் பிச்சைக்காரன் மகன் ஜீவா, 26; விழுப்புரம் வி.மருதுார் சாமிப்பிள்ளை மகன் அஜய், 25; தளவானுார் அரசாங்கம் மகன் அகிலன், 20; என்பதும், தப்பியோடிய நபர் விழுப்புரம் கே.கே., ரோடு கவுதம் என்பதும் தெரிந்தது.
இவர்கள் 6 பேரும், விழுப்புரத்தில் இருந்த மேற்குவங்க மாநிலம், கரக்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த அடிப்படையில் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வது, குடிநீர் பாட்டில்களை ஏற்றி அனுப்புவது உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளனர்.
இவர்கள் விழுப்புரத்தில் இருந்து கரக்பூர் செல்லும் ரயிலில் குடிநீர் பாட்டில்களை ஏற்றி விட்டு அதே ரயிலில் கரக்பூர் சென்று அங்கிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி ரயிலில் கடத்தி கொண்டு வந்து, விழுப்புரம் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளுக்கு சப்ளை செய்ய இருந்தது தெரிந்தது.
இதுபோன்று பலமுறை ரயிலில் கஞ்சா கடத்தி வந்தது விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து, யஷ்வந்த், ஜீவா, அஜய், ஹரீஷ், அகிலன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 350 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய கவுதமை தேடி வருகின்றனர்.

