ADDED : பிப் 11, 2026 03:53 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: மாவட்டத்தில் 50 போலீஸ் ஏட்டுகளை இடமாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
வளவனுார் போலீஸ் ஏட்டு சத்தியா விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கும், அங்கிருந்த ஏட்டு சிவக்குமார் திருவெண்ணெய்நல்லுாருக்கும், திண்டிவனம் ஏட்டு முருகன் மயிலத்திற்கும் இட மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும், கெடார் ஏட்டு ஷேக் அப்துல்லா கண்டாச்சிபுரத்திற்கும், அவலுார்பேட்டை ஏட்டு அறிவழகன் செஞ்சிக்கும், ஒலக்கூர் ஏட்டு சக்திவேல் கிளியனுாருக்கும் என மாவட்டத்தில் மொத்தம் 50 போலீஸ் ஏட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை எஸ்.பி., சாய் பிரனீத் பிறப்பித்துள்ளார்.
