/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணக்குப்பம் அரசு பள்ளியில்50வது ஆண்டு பொன்விழா
/
மணக்குப்பம் அரசு பள்ளியில்50வது ஆண்டு பொன்விழா
ADDED : ஜன 30, 2024 07:46 AM

திருவெண்ணெய்நல்லுார் ; திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மணக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 50வது ஆண்டு பொன்விழா நடந்தது.
விழாவிற்கு, ஊராட்சி தலைவர் கவுரி கோவிந்தராஜூலு தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முன்னாள் தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோவிந்தராஜலு வரவேற்றார்.
முன்னதாக 50வது ஆண்டு பொன்விழா நுழைவாயில் மற்றும் நாடக மேடை திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் விளையாட்டு, நடன போட்டிகள் நடந்தன. ஆசிரியர்களுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி பரிசு வழங்கினார்.
ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ராஜ்மோகன், ஊராட்சி துணைத் தலைவர் உமா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் விசாலாட்சி, துணைத் தலைவர் அபிதா உள்பட பலர் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் விஜயபால் நன்றி கூறினார்.