/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது தப்பிக்க முயன்ற நபருக்கு 'மாவு கட்டு'
/
ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது தப்பிக்க முயன்ற நபருக்கு 'மாவு கட்டு'
ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது தப்பிக்க முயன்ற நபருக்கு 'மாவு கட்டு'
ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது தப்பிக்க முயன்ற நபருக்கு 'மாவு கட்டு'
ADDED : ஜன 31, 2026 07:12 AM

கோட்டக்குப்பம்: முன்விரோதம் காரணமாக ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த சின்னகோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ராயர் மகன் அப்பு (எ) ஜவகர், 24; ரவுடி. இவர் முன்விரோதம் காரணமாக கடந்த 28ம் தேதி, கோட்டக்குப்பம் கறிக்கடை சந்து பகுதி பின்புறம் உள்ள அரிசி குடோன் அருகே 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, முன்விரோதம் காரணமாக அப்பு கொலை செய்யப்பட்டு தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய புதுச்சேரி சாமிப்பிள்ளைத்தோட்டம் வாஞ்சிநாதன் நகர் முருகன் மகன் ஹேமத்குமார், 26; அவரது சகோதரர் வசந்த், 23; சாமிப்பிள்ளைத்தோட்டம் 17 வயது சிறுவன், கருவடிக்குப்பம் கேசவன் மகன் கோகுல், 22; முத்தியால்பேட்டை சிவலிங்கம் மகன் கிரி (எ) கிரிகேஷ், 25; பாஸ்கர் மகன் தமிழ்மணி, 23 ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர்.
6 பேரையும் ஆயுதங்களை பறிமுதல் செய்ய, கறிக்கடை பின்புறம் உள்ள புதருக்கு அழைத்துச் சென்றபோது, வசந்த், போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து ஓட முயன்றார்.
அவரை போலீஸ் விரட்டி சென்றபோது, கீழே விழுந்ததில் வசந்த் இடது கை உடைந்தது. இருப்பினும் விரட்டிச் சென்று பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த 3 பைக்குகள், 3 மொபைல் போன்கள், கொ லைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.

