/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சூதாடிய 6 பேர் கைது: 4 கார், 2 பைக்குகள் பறிமுதல்
/
சூதாடிய 6 பேர் கைது: 4 கார், 2 பைக்குகள் பறிமுதல்
ADDED : நவ 25, 2024 05:07 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை கைது செய்து, 4 கார்கள், 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த மூங்கீல்பட்டு ஏரிக்கரையில் சூதாட்டம் நடப்பதாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பி யோடினர். இதில், மூங்கில்பட்டு அருள்தாஸ், 30; வெங்கந்துார் ராஜ்குமார், 30; விழுப்புரம் சின்னதுரை, 54; முட்ராம்பட்டு ராமு, 38; ஆலத்துார் ஆனந்தன்,42; வாழப்பட்டு புருேஷாத்குமார், 23; ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்து, 6,700 ரூபாய் மற்றும் அவர்கள் வந்த 4 கார்கள், 2 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பியோடிய தீபன் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.