/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆட்டோ மீது கார் மோதல் 6 பேர் படுகாயம்
/
ஆட்டோ மீது கார் மோதல் 6 பேர் படுகாயம்
ADDED : ஜூலை 05, 2025 06:52 AM
செஞ்சி, : ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
செஞ்சி, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியை சேர்ந்த வீராசாமி மனைவி ராணி, 45; இவரும் அதே பகுதியை சேர்ந்த முனியம்மாள், 55; முத்துநகை, 50; ஒதியத்துாரை சேர்ந்த மகாலட்சுமி, ராதிகா, சீனிவாசன், 60; ஆகிய ஆறு பேர் நேற்று முன்தினம் செஞ்சியில் இருந்து ஆட்டோவில் ஆலம்பூண்டிக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஆலம்பூண்டி மாதா கோவில் அருகே சென்ற போது, செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஆட்டோவின் பின்னால் மோதியது.
இதில் ஆட்டோ கவிழ்ந்து ராணி உட்பட ஆறு பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.