/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி ஒன்றியத்தில் ரூ.210 கோடி மதிப்பில் 600 கனவு இல்ல வீடுகள்; சேர்மேன் விஜயகுமார் பெருமிதம்
/
செஞ்சி ஒன்றியத்தில் ரூ.210 கோடி மதிப்பில் 600 கனவு இல்ல வீடுகள்; சேர்மேன் விஜயகுமார் பெருமிதம்
செஞ்சி ஒன்றியத்தில் ரூ.210 கோடி மதிப்பில் 600 கனவு இல்ல வீடுகள்; சேர்மேன் விஜயகுமார் பெருமிதம்
செஞ்சி ஒன்றியத்தில் ரூ.210 கோடி மதிப்பில் 600 கனவு இல்ல வீடுகள்; சேர்மேன் விஜயகுமார் பெருமிதம்
ADDED : அக் 01, 2025 01:07 AM

செஞ்சி ஒன்றியத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
முதல் அமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வழிகாட்டுதலுடனும், மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எம்.ஏ., வின் முயற்சியால் செஞ்சி ஒன்றியம் இதுவரை கண்டிராத வளர்ச்சியை எட்டி உள்ளது. செஞ்சி ஒன்றியத்தில் மழவந்தாங்கல், கணக்கன்குப்பம், காட்டு சித்தாமூர், தேவதானம்பேட்டை உட்பட 15 கிராமங்களில் 20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஜல்ஜீவன் திட்டத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பில் சிங்கவரம், ஜெயங்கொண்டான், புத்தகரம் உட்பட 20 கிராமங்களில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள் ளன.
முதலமைச்சரின் கிராம இணைப்பு சாலைகள் திட்டத்தில் சோ.குப்பம், மேல்எடையாளம், சிட்டாம்பூண்டி, வெள்ளாமை, வடகால் உள்ளிட்ட 25 கிராமங்களில் 18 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பாலப்பட்டு, தென்புதுப்பட்டு, தச்சம்பட்டு, வி.நயம்பாடி, காட்டுசித்தாமூர் உள்ளிட்ட 20 இடங்களில் 3 கோடி ரூபாய் மதிப்பில் ஜல்லி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 30க்கும் மேற்பட்ட குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. 50 பள்ளிகளில் கழிவறை சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் அங்கன்வாடி கட்டடம், ரேஷன் கடைகள், 25 இடங்களில் நாடக மேடை கட்டப்பட்டுள்ளது. தரணிவேந்தன் எம்.பி., நிதியில் இருந்து உயர் கோபுர மின் விளக்கு, நாடக மேடை, நியாயவிலை கடைகள், அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களுக்கான ஜன்மன் திட்டத்தில் தலா 143 கோடி ரூபாய் மதிப்பில் தலா 5.70 கோடி ரூபாயில் 250 குடும்பங்களுக்கு வீடு கட்டும் திட்டம் நிறைவேறி உள்ளது. 210 கோடி ரூபாய் மதிப்பில் 600 தலா 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
பொது நிதியில் இருந்து சிமென்ட் சாலை, கழிவு நீர் கால்வாய், உலர்களங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் செஞ்சி ஒன்றியத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன. இவ்வாறு ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தெரிவித்தார்.